சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு .

சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு.

அருள்படும் அண்டச் சேர்க்கை சேவையில்
     இருள்படு நெஞ்சத்து இடும்பைத்
தீர்க்கும்
பொருள்படும் ஆற்றல் அறிய தேவை
       பருப்பொருள் தழுவும் உருப்பொருள் நிலைப்பு.

நிலைப்பு நிம்மதி கிட்டும் அருமருந்து
      நிலைப்பில் நிற்பவை பொறுப்பில் பெறுபவை
தலைப்பு தலைமுறை முறைமைத் தொடர்
        வலைப்பின்னல் பக்கம் உருப்படி சேரட்டும்.

சேரும் காலம் தேடும் வண்ணம்
       யாரும் பற்றி அறிவதே அளவுகோல்
அருமை அன்பில் பெருகும் வல்லமை
        தருவதும் பெறுவதும் நற்குணத்தின் மலர்ச்சி.

மலரும் முகம் புதிய விசை
       பலரும் பின்பற்ற
நிம்மதியில் நிறைவுறும்
பலமுறையில் காத்து பொறுமையில் சிறக்கும்
      நலமுடன் வாழ பின்புலத்திலும் நகரும்.

   
புலரி புலன் உணரும் விடியல்
      மலரி மலரும் முகம் பார்க்கும்
அலரி பூக்கும் பூச்செடி காட்டும்
     பலரின் பாதுகாப்பு சமுதாய பார்வை.

பார்வை கொள் என நடைமுறை
       கார் குழல் காற்று அலை
நார்சத்து உணவும் உண்டு உயிர்
      சேர்க்க உறங்கும் நேரம் பழகு.

பழகு முறை இலக்கில்
உறங்கு
      வழக்கம் வழிபாடு கொள்முறை சிறக்கும்
பழகும் வாய்ப்பு உருவாக்க முடியும்
      வழக்கப்படி வளரும் தன்மை உடையது.

உடையது என்றும் சொற்படி விளங்கும்
      நடைமுறை வாழ்வில் நலம் தரும்
உடை உள்ளம் மகிழும் வண்ணம்
      அடையும் வரையறை இன்றே நிகழும்.


Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்