எழுமொழி முன்மொழி
யாவும் ஒன்று மிடம் அண்ணம்
பாவும் சேர்ந்து மிடற்றில் எழும்
நாவும் வளியிசை கண் டுடைய
தாவும் ஓசை இறுகும் பிறக்கும்.
பிறப்பு முதலே அன்பசை வழி
திறப்பு விழா யெழும் ஆக்கம்
மறப்பிடம் சொல்லிய பள்ளி நிலையிலும்
பிறப்பிடம் கொள்வதில் எழுமொழி அறியும்.
அறிந்து கொள்வன ஆறுதல் கூறும்
எறிந்து விழி மொழி சொல்லும்
பிறந்து வளர்ந்த பிறகு மொழி
பறந்து சென்று பற்றும் முன்மொழி.
முன் மொழிதல் பற்றி மேலும்
பின் தொடரும் நிலையுள மிடம்
தன் பொறியியல் புலனறிவு ஐவகை
என்றும் அதனைக் குழுவழிமுறை வகுக்கும்.