சொல்லொலி இயல்
தொன்மை பதித்த பதிவர் தொல்காப்பியர்
பன்மை வடிவ எழுத்துரு சொற்கள்
நன்மை தரும் தொடரே பொருட்கள்
தன்மை கொண்ட பண்பைப் பாடு.
பாடும் பணி ஏற்கும் வகை
நாடும் நாளும் இணையும் இணைப்பு
காடும் மலையும் இயற்கை பங்கு
தேடும் வழிமுறை ஒன்றே ஒன்றும்.
ஒன்றிய யாவும் நேரலைத் தொடர்
சான்றோர் வாக்குப் பதிவே மொழி
நன்றி “ஐயா” என ஒலிப்பும்
ஊன்றி கற்போம் ‘ஐ’ம்புலன்களில் ‘யா’ப்பு.
யாப்பு கொள்ளும் இலக்கு அகராதி
தப்பு இல்லாது கற்கும் சொற்கள்
எப்படி அடையும் வழியென ‘அணி’
ஒப்புதலில் அக்கணமே புரிதலே இலக்கணம்.