தத்தம் இதழ் தமிழ் அக புற இலக்கு.

தத்தம் இதழ் மொழி
( ‘த’+த்த+’மி+’த’+ழ்’ )+ (மொழி)
தமிழகபுற இலக்கு.
(தமிழ்+அக+புற+இலக்கு).,

தம் இதழில் தமிழ் ஊறும்
அம் மொழி அகத்தில் நின்று
உம் இதழ் செல் சொல்லும்
ஆம் தமிழ் மொழி என்று .

என்றும் நம் மொழி வரையறை
நன்று கற்றிடும் நாவிதழ் விளங்கும்
அன்று சொல்லிய வகைகூறும் கணியனார்
ஆன்றோர் மொழி சான்றோர் வாக்கு.

வாக்கு வாழும் மக்கள் தொகை
நாக்கு பயிலும் பயிற்சி மேலும்
காக்கும் தொல்பொருள்
ஆக்கம் தரும் வகை மொழியியல்.

மொழியில் உள்ளம் உள்ளது தம்மிதழ்.
வழிகாட்டும் மூலத் தொடரே தொடர்பு
எழில் கொஞ்சும் காட்சி அகம்
ஊழி மாற்றம் கண்டோர் கேட்பதே நிலவியல்.

நிலவியல் தோற்றம் மாறும் நிகழ்வு
நிலவும் நிலமும் பொழுதும் போகும்சுற்று
பலவும் நிகழும் உண்மை காலநேரம்
மூலப்பொருள் குழுமம் நிற்றலே தாய்மொழி.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA