தனம் தரும்புவி புதுப்புது விசை. விசை விண்ணின் சைகை என்போம்.
தனம் தரும்’புவி’ புதுப்புது விசை.
(விசை- விண்ணின் சைகை)
ஆண்டு பல செல்லும் புவி
பண்டு(பண்டைய )
கால கட்ட உயிரிழையில்
உண்டு உயிர்த்து வாழும் உயிர்க்கு
தொண்டு தொடரும் தொடர்பில் ஒன்பது.
ஒன்பது பத்து பக்கத்து இலக்கு
என்பது எதிலும் பலரின் முயற்சி
தின்பது ஒவ்வொரு நாளும் வளர்சிதை
மன்பது(மக்களினம்) மனித உயிரின குணம்
குணம் குன்று போல் விளங்கும்
மணம் வீசும் நறுமணம் கமழும்
அணம் மேல்வாய் தாடை உறுப்பு
கணம் தோறும் நிலைக்குழுவின இனம்.
இனம் இன்ப துன்ப மீள்சுழற்சி
வனம் காடு மலை நீரேற்றம்
தினம் காக்கும் காலக் குறியீடு
தனம் தரும்புவி புதுப்புது விசை.