பேரண்டம் இயல்பு ஆற்றலில் விளங்கும்
அண்டம் ஆற்றிடும் பெறும் சூரிய
மண்டலம் சுற்றி வரும் தடத்தின்
கண்டம் துண்டாக வலையும் நாடும்.
சுழலும் புவி சுற்றும் காற்று
வழக்கமான விண் அகத் தோற்றம்
பழகும் தொழில் நாட்டின் வாழ்வுறு
மழலைப் பேச்சே உயிரக ஆக்கம்.
ஆக்கத் திறன் செம்மொழி ஒலித்தொடர்
ஊக்கப் பயிற்சியே மதிப் பெண்
காக்கும் படை பற்றித் திகழும்
இயங்கும் தலைகால் முறைவழி யொன்றே.
முறை யுடன் ஒலிக்கும் நாக்கொலி
உறையிட்ட நரம்பொலி ஊன்று கோலன்றோ!
அறை யறையுறுப்பின் ஏற்ற யிரக்கம்
மறை வழிப் பயணம் உருபொருளன்றோ!