தவறுகள் தீர்ப்பு பெறலாம் உண்மையே
அவரவரின் வாழ்வின் சிறப்பு.
பொய்யா வானம் கால வண்ணம்
மெய்யாக வலைத்திடும் கரு மேகம்
ஓய்யாமல் சுற்றிடும் சுழற்சி முறை
ஏய்க்காது முனைப்புடனே மேலிடம் மேவிடும்.
மேவிய மேகத் தூரல்களின் குளிர்
பாவிடும் பரவிடும் மழைநீர் சேமிப்பு
காவிரி ஆற்றின் கரையிலும் பூத்திடும்
பூவினம் பூவ்விதழ் வளமெங்கும் பொங்கிடும்.
பொங்கிடும் பொருந்திடும் வாடைக்காற்றும் தூவிடும்
மங்கிய காதலும் செறிவில் கூடும்
தங்கிய தண்ணீரும் தரணியைக் காத்திடும்
பங்கம் ஏற்படாது காத்திடும் நாற்புறம்.
நாற்புறம் சூழ்ந்திடும் திக்குகள் யாவும்
மேற்புறம் வீடுகள் சீரமைப்பு கட்டிடம்
பெற்றவை பேணுபவை ஆளைவட்டமிடும்
கற்றவை மற்றவை நிலை பெற்றவையே.