திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை



திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை.

இயலுருவ ‘க’ற்பனை ‘தை’யலே “கதை”
நயம்பட உரைக்கும் பாடலினை ” குரல் “
இயங்கும் நெஞ்சின் நிலை இதழினை
இயக்கும் ‘ஆ’வென ஒலிப்பு முதலோசை.

முதல் அசை அன்பின் சைகைகுறி
இதமாக வருடும் தென்றல் காற்று
பதம் நாடி ‘ ஈ’வென சொல்லும்
உதய மாக ” துத்தம் ” ஈடுபடும்.

சொல் கேளீர் குறியீடு காண்பீர்
நல்லிசைவு கொள்வீர் காந்தாருவக் கைக்கிளை கொண்டு நாவிசை வல்லமை ‘ ஏ ‘ழிசை கதை யிலக்கு
எல்லா இசைவும் ” உழை ” தவர்க்கே.

அவரவர் வாழ்வும் வாக்கும் மனமும்
இவரிவர் இணையெனும் ‘ஐ’க்கியமே மக்கள்
எவரொருவரும் ” இளி ” யொலிப் பாவில்
பவனி வரும் களிப்பா ஓசை.

ஓசைகள் “ஓ”ங்கும் ” விளரி ” தமிழ்
இசைகளின் தாயகமே பாவரிசை யாம்
ஆசை அறுபது நாளல்லாததே உணர்வு
வசை பாடாக் கவிதை தாலாட்டு.

தாலாட்டு பாட்டும் பழகும் பண்பாடு
வாலாட்டத் தூண்டும் வகை ஒடுங்கும்
ஆலாபனை ராகம் தாளம் ஆதி
‘ஔ’வையீரடித் ” தாரம் ” நம்தாயின ” ஆரோசை “.

திருத் தக்கரவர் சீவகனை தமிழ்த்
திரு மணம் புரியும் கற்பனையை தைத்தவர்
திருத் தவக் கோலம் பூண்டோர்
திருமண நாள் காணா தவரென

தவத்திருநிலை கொண்டோர் காமநிலை அறிவோரா என
இவர் காப்பியப் பாவினை கேலிசெய்
தவர்கள் வியக்க இசைந்த இசைத்
தவரானாவர் கடைநிலைக் காப்பிய மியற்றினாரவர்.

ஆரோசை பண்ணும் பாடுபொருள் குழலிசை
பாரோசை தவழும் மொழியின் சிறப்பு
ஏரோசை வேளாண் காலக் கட்டம்
ஊரோசை அந்தாதி விசைத் திறனொலி.

திறன் ஒலியிசை கொண்ட இலக்கியம்
உறவுகள் மகிழ்ச்சி தரும் யாழிசை
இறக்கைச் சிறகுகள் கொண்ட புவிக்கோலம்
வறட்சித் தீர்க்கும் மழைநீர் வடிகால்.

வடிகால் துறைதனில் வாழும் மக்கள்
கொடி போலத் தொடரும் மரம்
செடிகள் நன்கு வளரும் புவிக்கண்டம்
ஊடி உறவாடும் பாவலரே திருத்தக்கர்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA