தொண்டு தொடரலையே!
மொழி முறைமை பதிவும் தொடரும்
வழிமுறை ஒன்றே ஒன்றிய யாவும்
ஆழிக் கடலலை சுழலலை எழுவதும்
ஊழி மாற்றம் புவியடி சறுக்கு.
சறுக்கு பற்றி பகுதி குறியீடும்
உறுதி பிடி மேல் தளநிலை
ஆறுதல் கூறி உயிர் தொடுக்கும்
மாறுதல் முடக்கும் மாறும் நிலையே.
நிலையது உருவம் கொண்ட புவிநாளும்
காலை வணக்கம் கூறி எழுப்பும்
மாலை வரை நீடிக்கும் சிறப்பு
தொலைதூரம் இன்று அருகலை தொடரலையே!!
தொண்டு பல செய்யும் பகிர்வு
உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை
கண்டு கேட்டு அறிந்த உணர்வு
ஆண்டு பலவாயினும் சுற்றும் மொழிஉலா.