நாடியதே நாடு. அடிச் சறுக்குச் சுற்றுப் பயணம் ஆடிய எண்ணற்ற நிலையே சமத்தட்டு துடிப்பாட்ட புவியாற்றல் நிலைக்கோடும் எரிமலை ஓடியெங்கும் எரிந்துவிலகி தணலுமடங்குவது நீராற்றலே. மலைவெட்டும் முகப்பு புவியின் வெடிப்பு உலைக் காய்ச்சிய செயலிலும் அசையாது தலைகால் இல்லா வட்டப் பாதையில் மூலை முடுக்கெலாம் கடலோட்ட ஆழிப்பேரலை. நீராற்றல் புவிசார் சுற்றின் வேகம் பேராற்றல் மிக்க நிகழ்வில் கலந்து ஆராய்ச்சி மிக்க தொடர் செயலே ஓராயிரம் ஆண்டின் தொகுப்பு படிமலர்ச்சி. படிமலர்ச்சி வரலாற்றில் பல்வேறு வகையாம் ஓடிய உருவாக்கம் பெற்ற கண்டம் நாடிய மண்டல நிலைக்கு ஏற்ப வாடி வதங்கி செழிப்பதே நாடு. குடிசை பகுதி வீட்டையும் நினை மாடிவீடு அடுக்கிய வரைபட அமைப்போரே நடிப்பில் பதவியாள்வோரே மதி கொள்வீர் நாடிய நாடே முழுமை பெறும்.