நாடோடி இறக்கைகள்:

உந்திச் செல்ல ஊரும் ஊர்திகள்
பந்தம் பாசம் படரும் மனிதவளம்
நந்தி போலமர்ந்து ஊருலகம் நாடும்
முந்திய வரையறை வரைபடம் பயணம்.

இருக்கும் பொருளின் இருப்புப் பாதை
அருகருகே உள்ளூர் தொட ரோட்டம்
தரும் வகையிலே இரும்பின் நீட்சி
வருவோர் போவோர்க்கு இடப்பொருளும் மாறும்.

நீராவி கொண்ட தொடர் இயக்கம்
பாராது நிற்காது நிற்பது நிலையம்
ஆராய்ந்து பார்த்து விட்ட தொடரி
ஓராயிரம் சொகுசான மின்னோட்ட இயக்கம்.

பறந்து செல்ல விமான நிலையம்
இறக்கை முளைத்த மின் பறவை
உறக்கம் கலைந்த பயணம் கொள்ளும்
கறந்து உறைந்துருளும் புவி வட்டப்பாதை.

https://anchor.fm/thangavelu-chinnasamy

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA