நிலைமொழி அறிவோம்!
நிலத்தை வாங்க விற்க முடியும்!
மாநிலத்தை கூறு போடும் முன்,
நாநலம் அறிந்து கொள்; வேலை
கலம், நெல், நீர் சேர்.
சேர்க்கை மூலமே விளங்கும் உயிரிழையம்
பார்க்கும் உலகில் பங்கேற்பீர்! பிரிப்பீர்!!
நார் சத்தில் இயங்கும் மெய்ப்பொருள்
போர் புரிந்து நாடி அடைவீரோ!
அடைக்கலம் தேடி அலைந்து திரிந்தீர்
படைத்தளம் கொண்டு பவனி வருவீரோ!
நடை போடும் மனிதா! நிலை
அடைவீர், நிம்மதி அறிவே மதி.
மதிக்கும் பண்பு நலன்கள் யாவும்
உதிக்கும் கதிரவனின் ஒளி வீச்சு
ஆதியந்தம் எல்லாம் சிந்தனை வளம்
வாதிடுவோரே பதி பக்தி இயக்கம்.
இயங்கும் மேலக நெஞ்சின் உரம்
தயங்கி, தயங்கி நிமிர்ந்து அறிந்தீர்
உயிர்க் காற்று பரந்த கடல்
மயிரிழையில் இழைந்திடும் உயிரினச் சேர்க்கை.
சேரும் வரை செல்லும் செல்
அரும்பு மலரும் பூக்களில் தேன்
ஊரும், உறவும், அன்பும் நட்பும்
சாரும் சார்பில் இயங்கும் விதம்.
விதம் விதமாக விதை விதையும்
இதம் தரும் இயற்கை உருவகம்
ஏதம் காணும் உள்ளம் கண்டு
வேதம் முதலே அன்பசை வழிபாடு.
வழிவகை செய்யும் வாய்ப்புச் செயல்
ஆழிகடலில் பள்ளி கொள்ளும் அளவே
நாழி அறிந்த நாளும் பொழுதும்
அழிந்து ஆக்கமே தரும் யாவிலும்.