நுண்பொருள் நெல்
உண்பொருள் அடிசில்(சோறு).
அடிசில் ஆக்கும் சோறு மசித்து
இடித்து புடைத்து துவைஅடிசில் துவையல்
அடிதொழுது வணங்கும் அடியார்க்கு உணவு
வடிச்சு வடித்த உண்ணும் சோறு.
சோறும் குழம்பும் தாளித்த ஓசையும்
ஊறும் நீர் சேர்த்து குழைத்து
நறுமணம் வீசும் காற்று புரவலரும்
பொறுத்து இருந்து விருந்து உண்பர்.
உண்விருந்து கண்ட தட்டு நிறைவை
வெண்சோறு சோற்று அமலை(ஆக்குதலை) வியப்பர்
கண்பட வளரும் கறிகாய் கனிகள்
விண்மழை பொழியும் நுண்பொருள் வெளிப்படும்.
வெளிவரும் நெற்கதிர் அறுவடை நெல்
அளிக்கும் அரிசி பொரியல் அவியல்
தளிரில் வளரும் செடி கொடி
களிப்புடன் புழங்கும் மொழி பழகுவோம்.