பாவின மொழி
நாவின் சீரடி
‘பா’வில் தோன்றும் இலக்கு முறை
‘ஆ’வில் ஒலிக்கும் குரல் அசை
‘நா’வில் சொல்லும் சீரடி செய்யுள்
‘யா’வில் நம் மொழிவடிவ யாப்பு.
யாப்பு அணி இலக்கண முறைமை
ஒப்புமை அசை அச்சொல்லின சைகை
ஒப்பிய எழுத்துரு உறுப்பின பிணைப்பு
ஒப்பீட்டு சொற்றொடர் வகை குறியீடு.
குறியீடு அக்கண புரிதலே இலக்கணம்
குறிப்பில் வழங்கும் நிகழ்வே மூலம்
குறித்த பதிவு பகிர்வு நிரல்
நெறிமுறை அடி சீர்வகை குறில்நெடில்
குறளடி சிந்தடி நேரடி நெடிலடி
பிறவகை யாப்பொளி கட்டளை வடிவம்
பிறப்பு இயல் எழுத்துரு பெறும்
அறம் பொருள் விளக்கிய மரபணு.
மரபணு நூற்பா மொழி முன்னிலக்கணம்
தரவு பரிமாற்ற பதிவு முறை
நரம்பியல் முயற்சி மொழி வகை
சீரடி ஓரடி பாவகை எதுகை மோனை.