புவியடித்தள பறிப்பு
உயிரணு இறப்பு.
புவியடித்தள பறிப்பு
உயிரணு இறப்பு.
நிலத்தடி நீர் காக்கும் புல்வெளி
பலபொருள் ஆக்கம் ஆற்றலே மாற்றம்
நலம் தரும் யாவும் பல்லுயிர்
வலம் இடம் வளரும் தன்மை.
தன்மை கொண்டதே உயிரிய வாழ்வு
நன்மை அடித்தரை வளமை நீரக
மேன்மைத் தோற்றம் புவியினப் பசுமை
இன்பம் துன்பம் ஒருநிலைக் காண்.
காண்பதும் கேட்பதும் உணர்வு கொள்ளும்
உண்ணும் உணவுப் பொருள் உள்ள
மண்ணும் கலப்பில் வளரும் விதையும்
விண்ணின்று பொழியும் மழையின் அளவே.
அளவுகோல் இருப்பு நிலைக் கலம்
வளவு எனும் வளையமே நிற்கும்
பிளவை புவியடிதனில் விரிக்கும் தொழில்
விளங்குமா என்றும் கேள்வியைத் தொடு.
தொடர்ந்த நடை முறைத் தகுதி
கடந்த கால அறிவின் சார்பு
ஊடகம் கொள்ளகம் வீடு பேறுகள்
இடமறிந்து செய்யும் செயலே நிலைப்பு.
நிலைப்பில் நதி செல்லும் நீர்
தலைப் பகுதி மிகுவது ஓடும்
ஆலைத் தொழில் நுட்பக் கழிவும்
கலையினச் சேர்ப்பில் வளமை கொள்வாரோ!
கொள்வார் கொள்வதை கொடுப்பதே நல்சேவை
வள்ளல் எனும் வணிக இலாபம்
தள்ளுபடி விலையில் தருதல் நன்று
கொள்முதல் நிலம் நிலைக் கழிவு நீர்.
நீரும் நிலமுமே மேல்தட்டு அடுக்கு
வாரும் வாயு மண்ணீர் கலப்பு தரும் புவியடி நம்மை கவிழ்க்கும்!
வரும் வருமானமோ! அனைவருக்கும் சுகமோ?