பொருள்கோள் மலரும் படிமலர்ச்சி பதிவு
அருள்கோள் வழங்கும் அருளிய சிறப்பு
உருவக்கோள் கொள்ளும் வடிவ இயல்
பருவகோள் பற்றும் பேரழகு தரும்.
தரும்கோள் விண்ணுலக வெளிப்புறச் சேர்க்கை
ஒருகோள் படரும் பற்றித் தொடரும்
இருகோள் பிரிவில் வேகச் சுற்று
கருதுகோள் கொண்டே விளங்கும் பரிவேடம்.
பரிவேடம் ஒளிவட்ட வெண்ணிற கருமேகம்
உரியவேடம் பூண்ட உரிய பொருள்
கரியவேடம் பெறும் வழி வகைகள்
அரியவேடம் தரும் மழைநீர்த் துளி.
துளித் துளியாய் மண்ணீர் சேரும்
வெளித் துளிகள் ஒன்றும் என்றும்
பளிச்சிடும் பசுமை புவி பொருள்கோள்
திளைத்திடும் சிந்தை முகப்பு பொலிவு.