மே நாள் பதிவு:
உள் நிகழ்வே உள்ள உண்மை
அள்ளிக் கொடுக்கும் பருவக் குறிக்
கோள் எது என்பதே உடைமை
நாள் நேரத்துள் உயரும் உழைப்பு.
உழைப்பை கண்டாளுபவரே முதல் ஆளர்
தழைக்க வேண்டுபவரே உழைப்பு ஆளர்
உழைக்கும் முறையறிபவரே அறிவு ஆளர்
உழைப்பைத் தரமாக்குபவரே
செயல் ஆளர்.
ஆளர் என பொருள் விளங்கும்
தாளாளர் வகுக்கும் வேலை வாய்ப்பு
நாளாக தொடர் மொழி தானெங்கே
ஆளாளுக்கு ஒரு கேள்வி ஞானம்.
ஞானமொழி பேசும் பேச்சு வழக்கு
ஆன கதை யிலக்கு அறக்கூற்று
வான மெங்கும் பரிதிநேரக் கொள்கை
கான மென பாட்டிசைப்புத் தொடர்.
தொடரும் நிலையுளவும் ஆங்கு பண்
படரும் வாழ்வு விசைக் கண்டோர்
நடப்பு அமைவிடம் ஒன்றைத் தேடி
கடந்து வந்த பாதையில் தெய்வம்.
தெய்வம் இருப்பது எங்கே என
வாய்மொழி இலக்கியத் தேர்வுத் திருவிழா
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியும்
தாய் தந்தைக்கு கடமையே உள்ளும்.
உள்ளும் புறமும் நிற்கும் மனிதம்
நாள் நேரம் வகுக்கும் வேலை
தாள் பணிந்து பதியும் சொற்கள்
உள் நிறைவு எம் உழைப்பு.
உழைப்பே உயர்வு தரும் இயற்கை
இழையும் உயிரில் வாழ முடியும்
ஏழை எளிய மக்கள் யாவரும்
உழைக்கும் கரங்களே! நாளும் வணங்குவோம்.