உள்ள தொரு அகக் குறியீட்டில்
வெள்ளைத் தாமரை வீதி வழி
பள்ளம் மேடு கடந்த ஆண்டுகளில்
எள்ளி ஏற்று பேசியதே மொழி.
நல்ல தொரு பழக்கம் நாளடைவு
அல்லவை நீக்கி ஆனவை பெற்றிடும்
வல்லிய மெல் லிடைப் பார்வை
இல் லாள் மலர்ந்திடும் வீடு.
பண் பாடும் பாடல் புரிந்த
உண்மை நிலை அறிந்தே ஏற்கும்
ஆண்டாண்டு கூடிய தொடர்பு படிவமே
கொண்டாடி மகிழ்ந்தவை ஆக்கம் தரும்.
இன்னும் பல சில சமயமே
நன்று நின்று நிலைத்த சொல்லில்
ஊன்றி படித்த பண்பாடே கணிப்பு
அன்றன்று தொகுத்த தொடரே மொழியாம்.