வரம் தரும் வழிகாட்டி முன்னோர்.,

வரம் தரும் வழிகாட்டும் முன்னோர்.

விருப்பம் விரும்பும் செயலைத் தூண்டும்
அரும்பு விடும் மலர் மொட்டு
தரும் தகவல் சேவை சேர்க்கை
இருப்பு வைக்கும் பொறுப்பின் உள்ளம்.

உள்ளம் உவகை பொங்கும் மனம்
துள்ளும் துவக்க கால அளவு
அள்ளிக் கொடுக்கும் தன்மை உடைமை
எள்ளி நகையாடாதே பொறுப்பே நிலைப்பு.

நிலைப்பு உங்கள் பயணத் தொடர்
அலை அலையாய் இலக்கினை அடையும்
வலை பக்க உந்து ஆற்றல்
கலை இலக்கியம் பண்பாட்டு வரலாறு.

வரலாறு நிலைப்பாடு வளரும் துறை
நரம்பியல் மூளைத் தொகுப்பு ஆக்கம்
ஆரம்ப கால மனித இனம்
வரம் தரும் வழிகாட்டும் முன்னோர்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA