15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் –
பழக்கம் வழக்கமாய்
ஆழ அகல விரியும் சமூகம்
குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு
இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை
எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு
தழுவி எடுத்துக் கொள்ளும் திறன்.
திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு
பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம்
ஆற அமர யோசித்து பழகினோம்
மறப்பதுடன் நினைப்பதும்
மனிதத் தன்மையானது.
தன்மை நிறைவதும் முழுமை பெறுவதும்
நன்மையுடன் சிறந்து துணை புரியும்
பன்மை பண்பாடு வரலாறு சமூகம்
ஆன்றோர் சான்றோர் வாக்கு பதிவு.
பதிவு பெற்ற நுண்ணிய ஆற்றல்
உதியமாகிய பல்லாண்டு கால முறை
நதி நீர் வாழ்நாள் முழுதிறன்
பதிவு பெற்றவை பலரின் பழக்கம்.
பழக்கம் உள்ளவை பலரும் பின்பற்றுபவை
வழக்கம் நம் நிறை செயலாகும்
உழவுத் தொழில் சேமிப்பு பண்டம்
ஆழ அகல விரிந்த சமூகம்.