அனைவருக்கும் வணக்கம்,
கீழ்க்கூறும் குறு காணொளி / காதொலி பகிர்வில்,
“செயல் மன்றம்”
இணையதளத்தினை
‘ மில்டன் கீன்சு டௌநட் ‘
பொருளாதார
“துளி நேர அமர்வு” கூட்டத்தில்
15 Mar 2023 அன்று பகிர்ந்து கொண்டோம்.
Sharing at Milton Keynes Doughnut Economics on 15th March 2023 –
In the Drop-In Sessions at the Leeds University United Kingdom
Through this Meeting.
செயல் மன்றம் இணையதளப் பகிர்வு
நயம்படும் ஆய்வுரை தொநட் சுழளாதாரம்
ஆயகலை கற்பிக்கும் அயலக முகாம்
உய்ய பரிந்துரைக்கும் சுற்றுச்சூழல் ஆதாரம்.
ஆதாரப் பொருளே உற்பத்திச் சுற்று
சாதாரண உயிரக தன்மை கொண்டதே
பாதகமிலா பாதகவீதியில் வீற்றிருக்கும் திறன்
மாதவம் புரிந்திடும் மனித உளம்.
உளம் கனிந்த இனிய பகிர்வு
வளம் தரும் படம் மூலமே
தளம் பாதுகாப்பு சமூக சேவை
களம் காணும் உயிரியத் தேவை.
தேவை நிலையில் நிலச் சீர்திருத்தம்
அவை யாவுமே முறை படுத்த
அவை யவை கொண்ட சட்ட மாறுதல்
நாவைசைத்து இயங்க நாடாள மன்றம்.