பற்றாக் குறையே அரசுநிதி !
மற்றவை நீளும் வரிவிதிப்பு !!
இயல் இறக்கையில் பறவை பறக்கும்
முயல் தாவும் பற்றும் கிளை
வயல் வெளி எலி கொறிணி
மயில் பறக்க எத்தனிக்கும் சிறகு.
சிறகு கொண்ட ஆற்றல் மிக்க
பறக்கும் நன்கு விரித்து மெல்ல
பறப்ப தெல்லாம் இயற்கைத் தேர்வு
பிறப்பின மாற்றமே காலயெல்லை அறிகுறி.
அறிகுறி எதுவும் தெரியாது தற்குறிப்பில்
பொறி ஐந்தும் இயங்கும் பேசும்
பறிக்கும் நெல்கதிர் அறுவடை காலக்கணிப்பு
பறித்தவுடன் பற்றிக் கொள்ளும் பற்றாளர்
பற்றாளர் பற்றிக் கொள்ளும் நிதி
உற்று பார்ப்போருக்கு நிதியுதவியும் தடுப்பு
ஆரம் வண்டி கண்டு பிடிப்பு
நரம்பு நடு முதுகு தண்டு
கரம் பிடித்து நடுவோர்க்கு தொல்லை.
தொல்லைத் தொடரிலும் தொடர்பிலும் புரிவர்
பார்வை கோடி சிறிய புள்ளி
ஆர்வம் கொண்டு ஆற்றல்மிகுத் திறன்
ஊர்வெளி வான்வெளி நோக்கம் ஏவுகணை
ஏவுகணை பாயும் கூர்மை மிதப்பு
நாவு உயர்வு நவிற்சித் தொடர்
பாவும் பண்ணும் பயிலும் முயற்சி
தாவும் நுட்பம் புவிசார் குறியீடு.
குறியீடு புத்துயிராய் அரசு நிதி
அறிந்து கொள்ளும் அறிக்கை வரிசை
வறியவர்க்கு வரிவிதிப்பும்
பற்றாக்குறை அரசுநிதியும்
ஆறிய கஞ்சியின் வளம் வறியவர்க்கு.