அந்தாதி எதுகை –
சேர்ப்பில் ஒன்றும்.
சேர்ப்பில் ஒன்றி சேரும் நற்குணம்
ஊர்ந்து ஊரும் பேரும் சொல்லும்.
இன்று உன் நாளை உன்
என்றும் உன் சிந்தனை செயல்
நன்று நிலைத்திடு நாளும் சென்றிடு
ஊன்று கோல் கருதுகோளில் என்றும் .
என்றும் உனை உறுதி கொள்வாய்
இன்முகம் நற்செயல் நன்றியுடன் கலந்திடும்
பன்முக ஆளுமை பண்பாட்டில் நிலவும்
ஆன்றோர் சொன்னவை ஆழ்ந்து அறிந்திடு.
அறிந்த கால கட்டம் அமைத்திடும்
செறிந்த சொல் கேளீர் அழகியல்
பற்றிடும் அழகில் மதிப்பு மிகும்
நற்றமிழ் இணைப்பு ஒருமுக கோர்வை.
கோர்வை அணியில் பற்றிய தகவல்கள்
பார்வை கொள்ளும் நோக்கில் வட்டமிடும்
சேர்ப்பில் ஒன்றி சேரும் நற்குணம்
ஊர்ந்து ஊரும் பேரும் சொல்லும்.