.
ஆதி அந்தம் தொடுப்பு:
பருப்பொருள் கொண்ட பேரண்ட பேரணி
உருப்பொருள் உருப்பெற்று தரும் யாவும்
இருப்பொருளால் விளங்கும் நிலைப்பாட்டில் ஆற்றல்
கருப்பொருள் பற்றும் படரும் சுற்றும்.
சுற்றும் பல முறைப்படி வழங்க
உற்றப் பொருள் நிற்கும் வகை
ஆற்றும் தன்மை உடைமை நிலைமை
ஏற்றுக் கொள்ள முடிந்தவை ஊரும்.
ஊரும் ஊடகங்கள் மூலம் பல
இருப்பு வைப்பு நிலையில் எழுச்சி
பாரும் சுழலும் செயல் இயக்கம்
ஒரு முறையில் தானே சிறக்கும்.
சிறப்பு சேர்த்து பிடித்த அழுத்தம்
ஆற அமர முடிச்சு போடும்
மாறாத மாற்றம் தோற்றம் மாற்றமே
ஏறாமல் இறங்காமல் இயக்கும் விசை.
விசை வரிசை நிலைத்து நிற்க
பசை வடிவ அமைப்பு நிலைப்பு
இசை தரும் இயற்கை சைகை
ஓசை யெழும் ஆக்கம் வேதியியல்.
வேதியியல் பொருட்கள் அனைத்தும் நிகழ்வு
கதிர் வீச்சு சுழல் பந்து
இதில் ஒவ்வொன்றும் சுற்றும் முற்றுகை
ஆதி அந்தம் தொடும் தொடுப்பு.