உள்ளத்தில் உள்ள உறவு
அள்ள அள்ள நிறைவே
மெல்ல மெல்ல எழும்
நல்நிலை நட்பும் காணும்.
புதுப்பிக்கும் நாளொன்றும்
இது போலொரு நிலை வருமென
ஊர்ந்து செல்லும் காலம்
கவர்ச்சி மிக்கோர் வியூகம்.
கல்லில் இருந்து கல்லூரி அமைத்தோம்
நெல்லைக் கண்டு கூன் நிமிர்ந்தோம்.
எல்லையற்ற அன்பினை இணைக்க
தொல்லையற்ற தொடர்பே படிமலர்ச்சி.
சங்கம நிகழ்வு இது
அங்கம் வகிக்கும் மெய்
நம் நாட்டகம் நாமறிய
ஆம் நிறைவுச் சுழலே புவி.
செவி செயல் நிலை
கவி பாடும் பாடல்
ஆவியாகும் கடல் நீரும்
ஓவியமாகும் உயிர்ப்பு.