உலகத் தாய்மொழி நாள் 21 02 2024 –
ஆத்திசூடி பாத்திட்ட
கரந்துறை பாவினம்
அன்பெனும் அகல்விளக்கு அனைவரின் அகத்தொடர் .
ஆக்கமும் ஆய்வும் ஆழ்ந்த ஆர்வமும்
இன்ப இணைவில் இதமாய் இணையதளம்.
ஈகை ஈர்ப்பில் ஈன்று ஈட்டும்
உணவில் உகந்தவை உண்டு உயிர்ப்புறும்
ஊக்கம் ஊகிப்பது ஊசலாடி ஊடகமாகும்
எங்கும் எக்கணமும் எச்சரிப்பும் எடுத்துக்காட்டும்.
ஏற்றுமும் ஏற்படும் ஏட்டிலே ஏறும்.
ஐந்தும் ஐம்புலத்திலும் ஐ’யா’வுடன் ஐக்கியமாகும்.(யாவும்)
ஒன்றும் ஒன்றின்மையும் ஒன்றிடும் ஒட்டும்.
ஓங்கிய ஓசை ஓரளவு
ஓசைவாயில்.
ஔவை ஔகம்(இடைப்பாட்டு) ஔதசிய(பால்)
ஔபத்தியம்(புணர்ச்சி).
அஃதை இஃதை அஃறிணையும்பற்றிடு
அஃதாக்கத்தில்.