தொடர் பரப்பி எளியோரினம் சேரட்டும்!
உலகத் தொடர் பரப்பி(USB) பருப்பொருள்
பலரது கையிலும் நற்றமிழாகட்டும்.
மாத்திரை ஓங்கிய ஒலிப்பு முறை
சித்திரை மாத தொகுப்பு ஆண்டில்
ஆத்திரை யிலிங்கே முத்தமிழும் படம்
நித்திரை வரை செல்லொளி பேழை.
பேழை தங்கிய பெட்டி இன்று
அழைப்பு மணியோசை அருகருகே உளப்பதிவு
நுழை வாயில் கட்டமைப்பு மின்னியல்
உழைப்பு என்றும் ஒன்றி ஓங்கும்.
ஓங்கும் பொருள் தரும் சொல்
தங்கும் காலம் வரை செல்லும்
இங்கு மங்கும் ஓடிய நடைமுறை
நங்கூரப் புள்ளியில் உலகத்தொடர் பரப்பி.
பரப்பில் தொடுப்பு இணைப்பில் இருப்பு
நிரந்தர இணைப்புத் தளத்தில் தயார்
தரமிகு பொருட்கள் தரணிப் பருப்பொருளில்
உரமிட்டு(உறுதி) எங்கும் வாழும் வாழ்க்கை.
வாழ்க்கை அறம் என்பதே உண்மை
தாழ்வில் உள்ளோர்க்கு தகவல் செல்லட்டும்
ஊழ்வினை யென்று ஏழ்மையை பழிக்காதே
ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோர் எளியோரினமே.