திசுக்கள் திசை சுழலும் ஆற்றல்
உசுப்பி விட்டு உயிர் வாழ
தசையின் கண் கணம் தோறும்
ஆசை அணை போட்டு நிலைப்பாடும்.
மண்ணில் நல் உருவாக்க காய்கறிகள்
உண்ணும் உணவாக உள் செல்லும்
உண்மை உயிர்ப்பு அங்கே
குருதி
அண்மைத் தொடர்த் தொகுப்பு தன்மை.
கருத்தாக்க கருவிதனில் மூளை முடிச்சு
உருவாக்க நாடி வரும் செயல்
தருண வெளி தொடர்பின் வடிவம்
இருப்பு கொள்ளும் வகை கொள்ளளவு.
கொள்ளும் பசைச் சருமம் உலவும்
அள்ளும் அளவுப் பணி யாவும்
தள்ளும் பல பகுதிக் குறியீடு
உள்ளும் உள் உணர்வு பகுப்பாய்வு.
பகுதி குறி பார்க்கும் பொழுது
தொகுதிக் கணைத் தொடும் அளவு
தொகுப்புத் தேர்வு ஆக்கம் தாங்கும்
வகுக்கும் பிரிவு வரிசை ஆகும்.
சொல்லால் நிலை நிறுத்தும் செல்
வல்லமையில் வழி காட்டும் கரு
நல்லமைவில் தொடராகும் வழி போக்கு
உல்லாச ஊர்தியில் செயலாக்கத் திசு.