மொழி பரிமாற்ற முறைமை வேண்டி
வழி நெடுக ஆற்றிடும் அறிவு
தொழில் தொடர படிவம் வடிவம்
எழில் கொஞ்சும் தோற்றத் தொகுப்பு.
ஏடு கண்டார் பாவில் படித்தார்
நாடு நாடி பாட்டு பாடினார்
காடு காக்க காப்புறுதி செய்தார்
ஊடு பொருள் பயிர் விதைத்தார்.
சுழியமா ஒன்றாவென ஒன்றில் ஒன்றி
ஊழியம் செய்திட பொறி இயலி
நாழியில் குறியீடு நகரும் செயல்
தமிழி எழுத்துரு தத்தம் இதழோசை.
குறை கண்டு சரி செய்ய
முறை மொழி மாந்தர் பயில
அறை இலக்கு இயலாக இயற்றிடும்
துறை தோறும் மாற்றிடும் பணி.