எழும் அசை  ஏழு சுரங்களில் ” பண் “.
எழில் பொங்க பாடும் இசை ” தமிழோசை. “

எழு உத்துப் பார் உயிரின உரு ” எழுத்துரு “
தொழுது பாடிடும் பண்பு
” இசைத் தமிழ் “
குழுவும் நாடிடும்  நடன அகம் ” நாடகம் “
எழும் அசை  ஏழு சுரங்களில் ” பண் “.

நெடில் உயிரெழுத்துரு ஒலியின்  ” ஆரோசை “
” அமரோசை “

குடிலினில் ஆற‌ அமர வைக்கும் ” எழிலோசை “

ஊடி உறவாடி மலரில் ஒலிக்கும் ” வண்டோசை “

நாடி நரம்பு உணர்வினில் கலந்திடும் ” தமிழிசை ” .

‘ஆ’வென்று ஒலி ஓங்கி ஒலிக்கும் ” குரல் “

‘ஈ’ வென இரங்கி துதி பாடும் ” துத்தம் “

‘ஊ’வென்றும் ஊரெங்கும்
கிளை பெருகும்
” கைக்கிளை “

‘ஏ’வெனும் ஏற்பாட்டுடன் உழைக்கும்  ” உழை “

‘ஐ’ என இணைந்து ஐக்கிய வழிகாட்டி ” இளி “

‘ஓ’ வென ஓங்கி  விளக்கமுடன் ” விளரி “

‘ஔ’ வில் தாள முறை தளவோசை ” தாரம் “

எழில் பொங்க பாடும் இசை ” தமிழோசை. “

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA