ஏழைகளே நிறைவை கொள்வர்!
நாளின் கணிப்பு நம்மவர் கொண்டவர்
ஆளின் கணிப்பில் நிலம் நீர்க்கொள்கை.
தாளில் பதித்து மதிப்புறு கொள்வர்
அளித்திடும் தன்மையே இறைமை இயற்கை.
இயற்கை பங்கு காட்சிப் படலம்
உயர மலரும் பூ மொட்டே
இயல் இசை திரிந்த காலம்
வயல் வெளிப் பயணப் பாதையே.
பாதை வழி வகுக்கும் மரபு
அதை யதை அறிந்த பழக்கம்
சதை சத்து தைத்த உணவும்
இதை அதனதன் தொகுத்த தொகுப்பு.
தொகுப்பு தேர்வு மூலக் குறியீடு
பகுப்பு பேராற்றலே சுற்றும் சுடர்
தகுதி தரம் குணம் திறன்
வகுக்கும் பொழுது உடம்படும் மெய்யியல்.
மெய் இயல் பொருள் தரும்
உய்ய உயர மலரும் பண்புகள்
ஆய்ந்து வேரை பற்றும் புவியடி
ஏய்த்து பிழைக்காதே உளமார உழை.
உழைப்பு என்றும் தராசுப் படிக்கல்
வாழை மரம் வாழ வேண்டும்
தழைக்கும் துளிர்களே துணைக் கன்றுகள்
ஏழை எளியோர் சிந்தும் வேர்வை.
வேர் தண்டு நிமிர்ந்த நடை
பார்க்கும் வண்ணம் மகிழ்ச்சி தரும்
ஊர் உலகம் போற்றிடும் தன்மை
பாரில் அவருக்கே கொள்முதல் இணைப்பு.
இணைப்பு பயன்படும் ஆண்டு தோறும்
பிணைப்பு ஒட்டும் நிலம் நீர்ச்சுற்று
துணைப் பகுதி வரவு வரையறை
ஆணை ஒழுங்கில் அமைப்பது நிறையும்.