நண்பர் தமிழ்த்திரு. சீதாராஜன் அவர்களுடன்(வ.உ.சி மகள் வழி கொள்ளுப் பேரன்) ——————————————– – கீழடி அருங்காட்சியக (ஒரு சில படங்களுடன்) உலாப்பதிவு., ———————————— கீழடி காட்சிப் பொருள்கள் – ஆழம் அளந்த அகழ்வாராய்ச்சி – கோடிக் கணக்கி லாண்டிலங்கே !! ————————————– முன்னோர் பதித்த கீழடிக் காட்சி பின்னோர் காலத்து காலடி நீட்சியறிவு அன்னாரின் (ஒத்தவரின்) இனியவை தொகுத்தோர் முடிவே நன்னீரால் வளம் பெறும் நாடு.
நாடு நாடும் நகரும் நகர் வீடு, வீதி வழிமுறைக் கொள்ளும் தொடும் வரை அகன்று விரியும் வாடும்(பசி., ) மக்களின் நீதியே தொடர்.
தொடர் ஆகி திரட்டிய இயல்பு வடம் பிடித்து ஓடிடும் பண்பு நடமாடும் வரை மனித வளம் உடம்படு மெய்வழி முறையடி வாழ்வறிந்திடும்.
வாழ்வறிந்த படிமலர்ச்சி நிலை கண்டார் ஆழ்ந்த ஆய்வகத் தொடர் கொண்டார் காழ் விரித்த மண்பாண்டம் செயல்பாடு பாழ்பட்டு நின்றடித் தோற்றம் காட்டுதிங்கே.
காட்டும் காட்சி சாட்சி சொல்லும் நாட்டின் நடப்பறிந்து ஊன்றுகோல் அருங்காட்சியகம் வீட்டினப் பொருட்களின் வழி காட்டும் பட்டினப் பழக்கமும் கோடிக் கணக்கிலங்கே.