சுற்றும் சுற்றுச்சூழலில் ஏற்றம் தரும்.

பேரண்டக வெளிச்ச ஆற்றல் நிலை
விண்ணகப் பாதை வீதி வழி
கண்டகப் பனித் துளிகள் நீர் நிலவளி
மண்டலப் பகுப்பு நிரல் பகுதியே.

நிலவளி நீர் காற்று மூலம்
பலவழித் துறை சிறப்பு காப்பு
கல்வி கற்றுத் துணை பெறு
பல வினையால் படியாதவையும் படியாகும்.

தலை முதல் கால் வரை
அலை அலையாய் செல் திசு
வலை வலையாய் பின்னிப் பிணைந்து
இலைச் சத்திலும் இருக்கும் வாழ்வு.

பிழைகள் பலவாகினும் இணையத் தளம்
தழைத்து வளர வேண்டிப் போற்றி
உழைத்து வாழ முடியும் அகம்
ஏழைக்கு  முழுக் கொள்ளளவே தரமாகும்.

அறம் வளர்க்கும் பெருமை சேர்ப்பு
துறவறத் துடிப்புச் சேர்க்கை கொள்கை
மற்றும் பல்பொருள் அங்க ஆடையணி
சுற்றும் சுற்றுச்சூழலில் ஏற்றம் தரும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA