தமிழ் தரும் : தசை அறிந்த தரத்தின் சைகை ஓசை கேட்டு ஓங்கியொலிக்கும் சைகை எசை பாட்டு எழுமொழியின் சைகை இசை வெளிப்பாடு இயற்கையின் சைகையே! சதை வளர்ச்சி சத்தில் தைக்கும் அதை தொடர்ந்த அன்பின் தையல் கதை படம் கலையில் தைத்து இதை தொடர்ந்து இனிய தைப்பொங்குமே! தாயனைத் தமிழின் உயிர் அணைப்பு மாயமென மறைத்த யதார்த்த நிலை ஆய கலைநோக்கில் ஆயிரமாயிரம் ஆண்டில் வாயடைத்து மலரும் தன்மை ஆறனையாற்றலே! மனித திறனே மதி கொள்ளும் இனிதே நிறைவு செய்யும் வகை தனித்த வடிவம் அணி சாரும் நனிமொழித் தமிழ் தரணியிலே இயக்கம்.