மக்கள் அனைவரும் மறைவஞ்சலி செலுத்துவோம்.
நல் சொல் ஊரும் தரும்
‘நெல்லை’ கண்ட முத்து ‘கண்ணன்’
சிலர் கருத்தில் தமிழ் கடலாகும்.
பல முறைமைக்கு அதுவே சான்று.
சொற்சுவை கூட்டும் சுழல் பேச்சாளன்
தங்கத் தமிழ் இலக்கிய நோக்கன்
பங்கம் இல்லா சொற்பொருள் குவிப்பான்
எங்கும் எப்பொழுதும்
நிலைக்கும் திறனாளன்.
பகுத்து அறிந்த அறிவுச் சாறினை
தொகுத்து வழங்கிய காணொளி பகிர்தலில்
அகத்தில் நிற்கும் பண்பாட்டு சொற்பொழிவினை
மக்கள் அனைவரும் மறைவஞ்சலி செலுத்துவோம்.