மனிதத் துயரமே மது பழக்கம்!
துன்பக் கடலில் மூழ்கும் மது
இன்ப மென நீந்தும் மதியோ!
உன் உயிர் நிலை கெடுக்கும்
தன் வழி தானே தடுக்கும்.
தடைகள் நீங்கி தவம் வளர
மடைகள் திறக்கும் உள் நுழைவு
இடை யிடையே ஆய்வுத் தொடர்
படை கொண்ட படிவ படிமலர்ச்சி.
நினைவு நாளும் கவ்விடும் நுட்பம்
உனை காணும் சதி வழக்கு
மனை பொருள்கள் சேகரிப்பு சேவை
ஏனைய யாவும் ஊரில் ஊறுமா!
நல் மையம் நலம் மிகும்
பல் லுறுப்பு படராய்த் தொடர
நில் கவனி செல் அமைவே
வல் லூறும் வடிவம் பெறும்.