விண்ணாற்றல் வரம்பு
மண்ணாற்றல் பாதை.
பருவ கால வசிப்பில் வியப்பு
துருவ பனி உருகும் நிலைப்பு
மருவிய பருவ மழை நீர்வரம்பு
துருவிய ஆய்வு களம் கருவி.
கருவி மூல விண்வெளி பாதை
உருவ மிலாத நீர்த்தேக்க தூரம்
அருவி போல் தெறிக்கும் துள்ளல்
சருகும் மயங்கி இருக்கும் தருணம்
தருவி பாய்ந்து கூடும் ஓட்டம்
வரும் வழித் தடையும் உறவு
ஒரு வடிகால் திட்டம் தீட்டும்
பருகும் நீர்த்தடாகம் பந்த பாசம்.
பாசமழை உயிரின வாயில் வாய்ப்பு
நேச கொடி படரும் கூடம்
வசந்த மலர்கள் விரியும் தன்மை
மோச மின்றிய மின்மாற்றும் விண்ணாற்றல்.
விண்வழி உந்து இலக்கு இயக்கி
மண்வழி வளப் பாத்தி கட்டும்
கண்விழி கண்டு மகிழும் வண்ணம்
உண்ண வழிகாட்டும் உயிர்த் தொடர்.