மனமே அம் ஒலியில் மனம்
மனம் உயிர்சார் பாலுட்டி இனம்
இனம் இடம் பெறும் மனிதம்
மனிதம் உயிரின நிகழ்வு படிமலர்ச்சி.
படிமலர்ச்சி படிவம், வடிவில் வரலாறு
ஆடி அசைந்து நடக்கும் உயிரியம்
நாடி நகரும் தன்மை அறிவு
ஓடியாடி வாழ தொடர் வழிநிலை .
வழிநிலை வாழும் மக்கள் இறைமை
தொழில் நுட்பம் சார்பு நிலை
வழி வகுக்கும் வகை உண்டு
வாழிய வாழியவே உயிரியக் கொள்கை.
கொள்ளும் அளவு நீர் சேரும்
அள்ளும் பணியில் ஈடுபடும் பொருள்
துள்ளும் உள்ளம் உணர்வில் சேர்க்கை
தள்ளி போடும் பழக்கம் ஊறும்.
ஊறும் உமிழ்நீர் நாளம் சுரக்கும்
சாறும் சிறிது தேனும் பருகு
ஆறும் வரை செல்லும் வல்லமை
ஆறுதல் கூறும் போது வெளியிடு .