அசை விதி: நிரையசை வாயசை இலக்கு

யாப்பின் இலக்கில் – இலக்கணம்

நிரையசை பதிவு

நிரையசை:

நிரையசையொலி  நெடில்குறி ஒலியினை இணைத்தலாகா
      திரையிசையொலி பாடல் அசைவரிகள் ஒன்றும்
உரையிசையொலி நாவதில் வளரும் ஒலி
       ஓரையசையுள் நெடில் குறில் ஆவதில்லை.

வாய் அசைவு  வரிகளில் ஒலி
      மெய்யறி வுணர்வாங்கே நிரல் நிரையசை
தாய் மரபணு வரிசைச் சொல்
      ஆய்வறிந்து ஒலிக்கும் செயல் திறன்.

இணையும் குறியீட்டில் நெடிலொடு ஒலிப்பசையும்
     இணைக்குறி யீட்டில் ஒற்றும் ஓசையும்
ஆணை ஒழுங்கு குறில் நெடிலசைவும்
      இணைந்து குறியியல் நெடிலொற்றும் நிரையசைவதே.
    
குறிலே நெடிலே இரு இணைகுறிலும் (ஒரு)
      குறியியலொலி இணை ஒற்றுடன் ஒலியும் (தமிழ்)
குறிலிலே நெடிலிலே இரு ஒலிப்பும்(சுறா,புறா)
       குறிநெடிலினில் ஒற்றும் வாயிதழால் நிரையசையிலே. (படாம்,விழார்). 

படாம் என்ற சொல்லின்
பொருள் : திரைச்சீலை ஓவியம், போர்வை எனப் பொருள் விளங்கும்.

“எவ்வளவு என்றாலும் சரியே;
கொடுப்பது அழகானது “

பாடாண் திணை :
பாணாற்றுப்படை துறை:

பரணர் , வையாவிக் கோப்பெரும் பேகன் பற்றி புறநானூறு 141வது பாட்டில் –
சாலமன் பாப்பையா 142ல்
பதிந்து உள்ளார் .

” படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ . ,”
மயிலுக்கு போர்வை அளித்தவன்   என்கிறார்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA