https://www.seyalmantram.in/author/tang1457/
‘ விரும்பி இருப்பது வீடு .
நாடிச்செல்வது நாடு . ‘
மனித சமுதாயம் மற்ற உயிரினங்களை விட என்றும்
சிறப்பாக இருப்பதற்கு காரணம் , தமக்கு தேவையான
பொருட்களை தக்க வைப்பதற்கான சூழ்நிலைகள
உருவாக்குவதே .
அறிவதற்கான சூழல்,
செயல்படுவதற்கான ஏற்பாடு , பாதுகாப்பான இருப்புகளை என்று இந்த 3 நிலைகளே .
மனித சமுதாய தொடர் செயல்களாக்குவதே சிறப்பான நாடாக அமையும்.
நாம் அறிந்து கொள்வதற்கான சூழல் , ஒவ்வொருவரின் வாழ்க்கை கருவறையில் இருந்து
காலம் இறுதி வரை தொடரும் .
அரும்பில் அறிவது
ஆற்றலைப் பெருக்கும் .
அறிந்தவைகளில் செயல்படுத்துவது என்பதே நம் செயல்பாட்டின் தொடக்கம் .
சமயக்கருத்துக்கள், நெறிகளுடன் வாழ்வதற்கே .
சமயம் , நம் முன்னோர்களின் வாழ்வு இயல்பின் வழிமுறை .
அறிவியல், தொழில் நுட்பம் , நம் கண்டுபிடிப்பின் தொடர் நிலை .
சமய நெறிகள் தான் நாம் கடைபிடிக்க வேண்டிய பண்பு , சமயங்கள் அல்ல .
அறிவியல் தொழில் நுட்பம் வளர, வளர பின்பற்றும்
நாம் , சமயங்களைப்பிடித்துக்கொண்இடு சமய நெறிகளை கை விட்டு விடுகிறோம் .
நம் பாதுகாப்பான சூழலாக, இயற்கையையும் அறிந்து செயல்படுவோம் .
எக்காலமும் அவரவர்கள் கடைபிடிக்கும் சமநிலை அனைவருக்கும் உகந்ததாகவே இருக்கும் .
நம் செயல்முறைகள் தான் மாறுபடும். எம்முடைய செயல்முறைகள் தான் சிறந்தது என்று
அவரவர்கள் கடைபிடுக்கும் செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து , அனைவருக்கும்
உகந்த நல்முறைகளை தவற விடுகிறோம் .
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் , வாழ்க்கைச் சூழல்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்று
பார்பபோம் .
இளமை ! இனிமை! இதோ! இதோ!!
—————————————-
இனிமை பருவம், இளமை வடிவம்
இளமை பருவம், இனிய வாழ்வு . இன்பம் இதுதான் என அறியாது .
நமது வடிவம் , நமது பெற்றோரின் வடிவ அமைப்புடனே , வாழ்க்கையும் வடிவமும் அமையும் .
சுற்றத்தாரின் வாழ்வும், சூழ்நிலை வாழ்வே . நம்பி ஏற்படும் நண்பர்கள் வாழ்வும் சுற்றத்தாரும் ,
நண்பர்களும் சூழ்நிலை அமைப்பே .
அறிந்து செயல்படுகின்ற செயல்களும்
பெரும்பாலும் , தம் அறிவிற்கு புலப்பட்ட
அருகாமையில் பயன்படுத்துகின்ற செயல்களே .
ஒரு சில பெற்றோர்கள் , தமது வாரிசுகளை அவரவர்கள் சமயத்துக்கு தக்கவாறு
நல் நெறிக்கோட்பாடுகளை குழந்தைகள் , இளமைக் காலம் வரும்வரை கண்காணிக்கின்றனர் .
நல் நெறிக்கோட்பாடுகள் வகுத்துக்கொண்ட எமது வாழ்க்கை அமைதி சூழ்நிலையை
வாழ்க்கையைத் தேடியது . கலாச்சாரக் நடைமுறைக் கோட்பாடுகளை கடைபிடிக்க எமது
கருத்து சுதந்திரமாக செயல்பட்டது . மற்றவர்கள் நடைமுறை வாழ்வில் செயலாக
கடைபிடித்ததை, கடைபிடிக்காமல் , நல்ல பழக்கங்களை மட்டும் பழக்கப்
படுத்திக்கொண்டேன் .
சமயமும் , அச்சமயமே
சமயக் கருத்துக்களும் , தம் பெற்றோர், சுற்றத்தாரின்
பழக்கங்களே வழக்கமாக அமையும் .
இளமைக் காலங்கள் , இனிமை காலமாக மாறுவதும்
பழக்கம் வழக்கமாக மாறுவதும் , நல்ல பழக்கங்களுக்கு வித்திடும் அத்தாட்சி .
நீதியுடன் நிதிப் பெருக்குவதே நியாயமான செயல்களின் அடிப்படை .
நீதி, நியாயம், நேர்மை நம்
வாழ்க்கையின் கண்ணுக்கு புலனாகாத அடிச்சுவடு .
நேரத்துக்கு நேரம் மாறும் தன்மை உடையது . இது தான் சரி என்று ஒரு காலத்தில்
வகுத்தவை, மற்றொரு காலத்தில் தலைகீழாக மாறி விடும் .
ஒரு குழுவாக , ஒவ்வொரு சூழலில் இருந்த நாம் ஒரு குறிப்பிட்ட
வட்டாரத்திலியே பழகி இருந்தோம் . இன்று போக்குவரத்து துரிதமாக
சென்று விடும் காலமாக இருக்கின்ற சூழலில் பல்வேறு இடங்களுக்கும்
சென்று நமது இறை அமைதியைத் தேடுகிறோம் .
கல்லை கும்பிட்ட ஒரு கலாச்சாரமாக இருந்த நாம் கோயில்கட்டி சிலை செய்து ,
அச்சிலையை தெய்வமாக கொண்டாடுகிறோம் .
நீதியை நிலைநாட்ட அந்தந்த கிராமக் குழுவே முடிவு எடுத்து காரண காரியங்களை அலசி
ஆராய்ந்த நமக்கு , மாவட்ட , வட்ட, மாநில தேசிய அளவிலான முடிவை ஒரு சட்டமாக ஏற்றி
அச்சட்டத்தை நிலை நாட்டுகிறோம் . நேர்மை அகத்து ஆராய்ச்சி முடிவே .
அனைத்து சமயக்கருத்துக்களும் அடிப்படையில் ஒன்றாக இருந்த போதிலும் , செயல்பாட்டில் ,
நடைமுறையில் ஒவ்வொரு சமயமும் மாறி நின்று, தம்முடைய சமயக் நடைமுறையை
சிறந்தது என்று, எழுதப் படாத சமயக் கோட்பாடுகளும் காலத்திற்கு தகுந்தவாறு
மாறிக்கொண்டே இருக்கின்றன .
நம் முன்னோர் பழக்க வழக்கங்களை கதையாக கூறிய ஆதி கால மனிதர்கள், காலப்போக்கில்
ஓவியமாக வரைந்தனர் .
சிற்பமாக, ஒவியமாக வரைந்ததை பாடல்களாக மாறின . பாடல்கள் பலர் கூடும் இடங்களில்
பாடினர் . பின், குழுக்களாக இருந்த மக்கள் யார் வலிமை வாய்ந்தவர்கள் என நிருபிக்க போட்டி
மனப்பான்மை உருவானது. போட்டி, பொறாமையாக உருவெடுத்தது, நில உரிமை
போராட்டமாக தொடங்கியது . பெரிய குழுக்கள் ஒன்று சேர்ந்து , பெரிய குழுக்கள்
நிர்வகித்தவர்கள் தங்களுகளுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக்கொண்டனர் , தங்கள் கீழ் வேலை செய்தவர்களை அதற்கு உண்டான காரியங்களில் ஈடுபடச் செய்தனர்.
கதை
காவியங்கள், பல கதைகளாகவை இருந்தன. கதைகள் , கருத்துக்களை, அன்றாட நடைமுறைகளில் விவரிக்கும் ஒரு நிழற்படம் . கருத்துக்களை, கருத்துடன் ஏற்போம் .
கதையின் கற்பனைகள் காலத்திற்கும், வாழும் சூழ்நிலைக்கேற்ப மாறும்.
கதைகளை நிஜமானது என நம்ப வேண்டாம்.
காவியம் :
பல ஆழ்ந்த சிந்தனை செயல்புடையோர், கற்பனையின் தொகுப்பை, ஒர் நெடுந்தொடராக, அக்கால நிகழ்ச்சிகளை கதாபாத்திர வர்ணனையோடு பதிந்து வருகின்றனர். ஒவ்வொரு மொழியிலும் இச்சிந்தனைத் தொடர்கள் காவியமா மலருகிறது. தமிழிலும் இது போன்ற காவியங்கள், காபபியங்களாக உருவானதில் ஜம்பெரும் காப்பியங்கள் மிகவும் சிறப்புடையது. இக்காப்பியங்கள் ,
நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிக்க உதவுகின்றன.